டான்செட் விணணப்பிக்க இன்று கடைசி நாள்

Image result for tancet 2019


முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். டான்செட் நுழைவுத்தேர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 8ம் தேதி தொடங்கியது.

 நேற்று மாலை 6 மணி வரை எம்பிஏ படிக்க 16,427 பேரும், எம்சிஏ படிக்க 4,672 ேபரும், எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிக்க 10,288 பேர்  என மொத்தம் 31,387 பேர் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

எம்சிஏவுக்கு ஜூன் 22ம் தேதி  காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்பிஏ படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment