பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் ஏற்பாடு மாணவ மாணவிகளுக்காக
நீங்கள் 14417 என்ற எண்ணுக்கு போன் செய்தால், "வணக்கம், பள்ளிக் கல்வித்துறை" என்று ஒருவர் உடனே பேசுகிறார். நமக்கான விபரங்கள் அனைத்தையும் தருகிறார்.

#பயன்படுத்திக்கொள்ளுங்கள்_மாணவ_செல்வங்களே!

ஹெல்ப் லைன்’ அறிமுகம்
பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், ’14417’ என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, கடந்த 2018ம் ஆண்டு நமது தமிழக அரசு   அறிமுகப்படுத்தியது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்த கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 32  மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 24 மணி நேரமும் ’14417’ என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் இலவசமாக தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களும் கனிவாக வழங்குகிறார்கள்.

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், கல்வி கட்டணங்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள், நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் இங்கு பணிபுரிபவர்கள் மிக அருமையாக வழங்கி வருகிறார்கள்.

No comments:

Post a Comment