விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ரேஷன் கார்டு

Image result for tn ration card

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், உணவு வழங்கல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டுகள் அவசியம். பலரும், புதிய கார்டு கேட்டு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி, மார்ச், 10ல் வெளியானது. அதனால், உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் நிறுத்தப்பட்டது. 

'தேர்தல் நடத்தை விதிகள் நிறைவடையும் போது, புதிய ரேஷன் கார்டுகளை வழங்கலாம். அதுவரை, பயனாளிகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்யுங்கள்' என, அதிகாரிகளுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டது. மேலும், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கும், ஒப்புதல் தரக்கூடாது என, தெரிவிக்கப்பட்டது.தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, சென்னையில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர், இன்று முதல், புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment