சென்னை:பள்ளி மாணவர்களுக்கான, இலவச மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆதிதிராவிடர் சமூக சேவகர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை, தண்டையார்பேட்டை, மணிகூண்டு அருகில், எண், 19, ரத்தின சபாபதி தெருவில் உள்ள, ஆதிதிராவிட மாணவர் இல்லத்தில், 4ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இந்த விடுதியில், ஆதி திராவிடர், பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதரவற்ற மாணவர்கள் சேரலாம். தற்போது வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, அலுவலகத்தில் சமர்ப்பித்தால், ஜூன், 1ம் தேதி முதல் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.சேர்க்கை நாளன்று, மாணவரின் அசல் ஜாதிச்சான்று, வருமான சான்று, இறுதியாக பயின்ற கல்வி நிறுவனத்தின் கல்வி சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment