காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான, 'கவுன்சிலிங்' எனப்படும் நேர்காணல் இன்று துவங்குகிறது.சின்ன காஞ்சிபுரத்தில், பச்சையப்பன் மகளிர் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், 2019 - 20ம் கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம், ஏப்., 23 முதல், மே, 6ம் தேதி வரை வழங்கப்பட்டது. மொத்தம், 3,500 மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த மாணவியருக்கான நேர்காணல், இன்று முதல், 17ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாளான இன்று காலை, 8:00 மணிக்கு, ரெகுலர் கல்லுாரிக்கும், மதியம், 2:00 மணிக்கு, மாலை நேர கல்லுாரிக்கான நேர்காணல் நடப்பதாக, கல்லுாரி முதல்வர், டாக்டர் ஸ்ரீமதி ராமலிங்கம் தெரிவித்தார்.