உள்ளாட்சி வார்டுகள் பட்டியல்வெளியிடுவதில்,தொடர்ந்து இழுபறி

இட ஒதுக்கீட்டின்படி பிரிக்கப்பட்ட, உள்ளாட்சி அமைப்புகளின், வார்டுகள் பட்டியலை வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.


உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன.பெண்களுக்கு, 50 சதவீதம்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி, வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பட்டியலை சரிபார்த்து, மூன்று மாதங்களுக்கு முன், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசின் நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல், உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலை நடத்த, மூன்று மாத அவகாசத்தை, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.இடஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்ட, புதிய வார்டுகளின் பட்டியலை, அரசு முறைப்படி வெளியிட வேண்டும்.மாநில தேர்தல் ஆணையம், பட்டியலை ஒப்படைத்து, மூன்று மாதங்களாகியும், அதை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளது. 
பிரிக்கப்பட்ட வார்டுகள் விபரத்தை அறிய முடியாமல், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தவித்து வருகின்றனர்.இப்பட்டியலை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள, தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வெளியிட வேண்டும் என்ற, எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.

No comments:

Post a Comment