சான்றிதழ் பாதுகாப்பு: யு.ஜி.சி., உத்தரவு

Image result for ugc

சென்னை : 'அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளும், மாணவர்களு : க்கு பாதுகாப்பு குறியீடுகளுடன், பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும், போலி சான்றிதழ்கள், போலி பல் கலைகள், போலி கல்லுாரி களை ஒழிக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, பல்கலைகழக மானிய குழுவின் வாயிலாக, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.அதன்படி, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை :

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில், பாதுகாப்பு குறியீடு கள் இடம் பெற வேண்டும் என, ஐந்தாண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. போலி சான்றிதழ்களை ஒழிக்க, இந்த பாதுகாப்பு குறியீடுகள் காலத்தின் கட்டாயம்.எனவே, பட்டப்படிப்பு சான்றிதழ்களில், 'ஹோலோக்ராம்' குறியீடு, க்யூ.ஆர்., கோடு உள்ளிட்டவை, கட்டாயம் இடம் பெற வேண்டும். மாணவர்களின் பெயர், கல்வி நிறுவனத்தின் பெயர், இடம் போன்றவை யும், உள்ளீட்டு குறியீடாக இருக்க வேண்டும்.அத்துடன், ரெகுலர், பகுதி நேரம் மற்றும் தொலைநிலை என, மாணவர்கள் எந்த வழியில் படித்தனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு குறியீடுகளை, சான்றிதழ்களில் இடம் பெற வைக்க, பல்கலைகள் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment