மூன்றாண்டாக சம்பள உயர்வில்லாத ஆறாயிரம் கவுரவ விரிவுரையாளர்கள்

Image result for guest lecturer tn

திண்டுக்கல், கடந்த மூன்று ஆண்டாக சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு இன்றி 6 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் தவிப்பில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசு கல்லுாரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரிகளில் 6 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2011-ல் வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து 2016 பிப்ரவரி முதல் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக சம்பள உயர்வில்லை.தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவவிரிவுரையாளர் சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது :மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி முதல் 3 சதவீத அகவிலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை.1.1.2010 முதல் அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளமாக ரூ.25 ஆயிரம், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என யு.ஜி.சி., பரிந்துரைத்துள்ளது.ஆனால், வழங்கவில்லை. சட்டக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி, கல்லுாரிகளில் கற்பித்தல்பணியில் மட்டும்16 ஆயிரம் பேர் வரை பணியாற்றுகின்றனர்.எனவே, தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment