இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு இன்று துவக்கம்

சென்னை:தமிழக கல்லுாரிகளில் சேர்வதற்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பப் பதிவு, இன்று துவங்குகிறது.


தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சிலிங் நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலை, இந்த கவுன்சிலிங்கை நடத்தும். இந்த முறை, அண்ணா பல்கலைக்கும், உயர் கல்வி துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், கவுன்சிலிங்கை நடத்தும் பணியில் இருந்து, அண்ணா பல்கலை விலகியது.
இதையடுத்து, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, கவுன்சிலிங்கை நடத்த, உயர் கல்வி துறை முடிவு செய்துள்ளது. ஆன்லைன் பதிவுக்கான, www.tneaonline.in என்ற இணையதளத்தின் உரிமம், நேற்று முன்தினம் வரை, காலாவதி நிலையில் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, உயர் கல்வி துறை, நேற்று இணையதள உரிமத்தை புதுப்பித்துள்ளது.
இன்று, கவுன்சிலிங்குக்கான பதிவுகள் துவங்க உள்ளன. மே, 31 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்குக்கு எப்படி விண்ணப்பிப்பது; அதற்கு தேவையான சான்றிதழ்கள் என்ன; ஆன்லைன் உதவி மையங்கள் எங்கே உள்ளன என்ற விபரங்களை, இணையதளத்தில், நேற்று வரை உயர் கல்வி துறை வெளியிடவில்லை.

No comments:

Post a Comment