எமிஸ் இணைய தளத்தில், ஆசிரியர்களின் விவர பக்கத்தில், யாருக்காவது புகைப்படம் பதிவேற்றாமல் விடுபட்டிருந்தால், தற்போது பள்ளியின் எமிஸ் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உட்புகுதல் வழியாக புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய இயலாது.சம்பந்தப் பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் வ.க.அ. மூலமாக மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாநில எமிஸ் ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகளை தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 தொடர்பு கொள்வது நல்லது.