குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு -டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்

நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 


இந்த தேர்வில் கேட்கப்பட கேள்விகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்தார்.  இந்த வழக்கை இன்று நீதிபதிகள் விசாரித்தனர். 

இந்த விசாரணையில் குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக இருந்ததாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது

No comments:

Post a Comment