இன்ஜி. கல்லூரிகள் ஜூலை 1ல் திறப்பு

சென்னை, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூலை 1ல் வகுப்புகள் துவங்க உள்ளன.இன்ஜினியரிங் கல்லுாரிகள் இரண்டு மாத கோடை விடுமுறை நாளை மறுநாள் முடிகிறது. இதையடுத்து அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும் ஜூலை 1ல் திறக்கப்படுகின்றன.கல்லுாரி திறப்புக்கு முன் வளாகத்தை சுத்தம் செய்து உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்து தண்ணீர் வசதிகள் செய்து கொள்ள வேண்டும் என கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளுக்கு தனியார் லாரிகள் வழியாக தண்ணீர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment