சென்னை: அரசு அளித்த பயிற்சி காரணமாக, 2,583 பேர், 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேரும் வகையில், அரசின் சார்பில் இலவச, 'நீட்' நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 19 ஆயிரத்து, 680 பேர் பயிற்சி பெற்றனர்.அவர்களில், 14 ஆயிரத்து, 929 பேர், நீட் தேர்வு எழுதினர். தமிழ் வழியில், 10 ஆயிரத்து, 208 பேர் எழுதியதில், 1,414 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கில வழியில், 4,721 பேர் எழுதி, 1,169 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 2,583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், 39 பேர், 300 - 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.