ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 27 வரை அவகாசம்

திருநெல்வேலி, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி மையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 87 அரசு ஐ.டி.ஐ.,களும், 476 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி மோட்டார் மெக்கானிக், பிட்டர், டர்னர் என 63 தொழிற்படிப்புகள் உள்ளன.ஐ.டி.ஐ.,படிப்புகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க, இலவச பஸ் பாஸ், லேப்டாப், மாத உதவித்தொகை ரூ.500, சீருடைகள், பயிற்சி புத்தகங்கள், வரை கருவிகளை இலவசமாக வழங்குகிறது. மாணவிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது. ஐ.டி.ஐ.,யில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜூன் 15 வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment