இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு

சென்னை, 'ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை, 8 முதல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு பள்ளி ஆசிரி யர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான, கவுன்சிலிங் விதிமுறைகள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மைச் செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.இந்த முறை, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை இணையதளத்தில் உள்ள, ஆசிரியர் விபரங்களின் அடிப்படையில், 'ஆன்லைன்' வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், ஒரே பள்ளியில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மேலும், ஒரு பணி தொகுப்பில், 100 காலி பணியிடங்கள் இருந்தால் மட்டும், இடமாறுதல் வழங்கப்படும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இடமாறுதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 28ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். ஜூலை, 8 முதல், 15ம் தேதி வரை, பல கட்டங்களாக, இடமாறுல் கவுன்சிலிங் நடக்கும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment