மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகள் மாற்று ஆசிரியர் நியமனம் இல்லாமல் பாதிப்பு

அரசு பள்ளிகளில் நீண்ட விடுப்புகளான மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்குமாற்றாக ஆசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக அரசு பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பல மாறுதல்களைக் கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு ஆண்டிற்கு210 லிருந்து 220 வேலை நாட்கள் என்ற நிலையில் ஆசிரியர் விடுப்பால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப தேவையான நடவடிக்கைஎடுக்கப்படாததால் பல வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. துவக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகளில் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் பேர் ஆண்டு தோறும் மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பில் செல்வதாகக் கூறப்படுகிறது.


முதலில் 6 மாதமாக இருந்த மகப்பேறு விடுப்புஅதிகரிக்கப்பட்டு தற்போது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கல்வியாண்டே சம்பந்தப்பட்ட ஆசிரியைவகுப்பு நடத்தப்படாமல் போய் விடுகிறது.அதனால் சம்பந்தப்பட்ட வகுப்பில் அந்த ஆசிரியை எடுக்கும் பாடம் முழுமையாக கற்கும் வாய்ப்பைமாணவர்கள் இழக்கின்றனர்.1992க்கு முன்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில்பள்ளிகள் இருந்த போது மாற்றுப் பணிக்கென்று தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் எப்போதும் காத்திருப்பில் இருப்பர். இதனால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில்பாடம் நடத்த இந்த மாற்று ஆசிரியர்கள் பயன்பட்டனர். ஆசிரியர் விடுப்பால் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை.1992க்கு பின்னர் அரசுக் கட்டுப்பாட்டில் பள்ளிகள் வந்த பின்னர் இந்த நடை முறை முழுவதுமாக கைவிடப்பட்டது.இதனால் பல பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடத்தப்படாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருந்தது.பின்னர் அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க இடைநிலை ஆசிரியருக்கு ரூ 2 ஆயிரம்,பட்டதாரி ஆசிரியருக்கு ரூ 3 ஆயிரம் ஊதியம் வழங்க தலைமையாசிரியர்களுக்கு நிதி வழங்கியது.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த வாய்ப்பும் நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும்அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் தற்போதும் மாற்றுப்பணிக்கு ஆசிரியர் நியமிக்கும் வாய்ப்பு தொடர்கிறது.தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் பள்ளிக்கல்வித்துறை இதற்கும் சரியானதீர்வு காண வேண்டும். ஒன்றிய அளவில் அல்லது கல்வி மாவட்ட அளவிலாவது மாற்று ஆசிரியர்கள் தயார் நிலையில்இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment