இன்ஜி., தொழிற்கல்வி கவுன்சிலிங் துவக்கம்

சென்னை, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங் நேற்று துவங்கியது.இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாளில் மாற்று திறனாளிகளுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில் 143 பேர் அழைக்கப்பட்டதில் 111 பேர் பங்கேற்றனர்; 101 பேர் 'சீட்' ஒதுக்கீடு பெற்றனர்.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது; 956பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது; 499 பேர் மட்டும் பங்கேற்றனர்.அவர்களில் 121 பேர் இடங்களை பெற்றனர். இன்று விளையாட்டு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை இன்று முடிகிறது.அதேநேரம் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது.முதல் நாளில் 500 பேர் அழைக்கப்பட்டதில் 441 பேர் பங்கேற்றனர்; 436 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.தொழிற்கல்வி கவுன்சிலிங் இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

No comments:

Post a Comment