புதுச்சேரியில் 'நீட்' தேர்ச்சி அதிகரிப்பு

புதுச்சேரி:'நீட் தேர்வில் புதுச்சேரியில் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளதால், மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் கடும் போட்டிஏற்பட்டுள்ளது.

.'நீட்' தேர்வு எழுதிய புதுச்சேரி மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தாண்டு மருத்துவ சேர்க்கையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே இடங்கள் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லுாரி, மூன்று சுயநிதி மருத்துவ கல்லுாரி மற்றும் மூன்று நிகர்நிலை பல்கலை மருத்துவகல்லுாரிகள் என மொத்தம் ஏழு கல்லுாரிகள்உள்ளன.இதில், நிகர்நிலை பல்கலையில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, டில்லியில் உள்ள மருத்துவ இயக்குனரகம் மூலம் சேர்க்கை நடக்கிறது.புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த சென்டாக் மாணவர் சேர்க்கையில், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில், 105 இடங்களும், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் 150, பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 100, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 150 இடங்கள் அறிவிக்கப்பட்டது.இதில், அரசு ஒதுக்கீடாக அரசு கல்லுாரியில் 105, பிம்ஸ் கல்லுாரியில், 54; மணக்குள விநாயகர் கல்லுாரியில் 55; வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 55 இடங்கள் என 269 இடங்கள் அளிக்கப்பட்டது. மற்ற இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டது.
இந்தாண்டும் இதே நிலையில் இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் 269 அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு கடந்த ஆண்டு 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விபரம் அட்டவணையில்;மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்பப்பட்ட பின்பு, நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் முதலில் புதுச்சேரி மாணவர்களை கொண்டு நிரப்பப்படும். இரு மருத்துவ கல்லுாரிகள் மொழி வாரிய சிறுபான்மை பிரிவின் கீழ் வருவதால், மொழிவாரிய சிறுபான்மையினர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்படும். புதுச்சேரி மாணவர்கள் நிரப்பப்பட்ட பின்பு, நிரப்பப்படாத இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாற்றப்பட்டு அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்படும்.இந்தாண்டு 'நீட்' தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், அதிக மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். மாநில அளவில் மாணவி ஸ்ரீ தர்ஷினி 641 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 400 மதிப்பெண்ணிற்கு மேல் 118 பேரும், 399 முதல் 300 வரை 270 பேரும், 299 முதல் 200 மதிப்பெண் வரை 361 பேரும், 199 மதிப்பெண் முதல் 150 மதிப்பெண் வரை 542 பேர் பெற்றுள்ளனர்.இந்தாண்டு பொது, எம்.பி.சி., எஸ்.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு 'நீட்' தகுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ள 107 மதிப்பெண்ணை 2,320 பேர் பெற்றுள்ளனர். அதனால், இந்தாண்டு மருத்துவ சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment