தூய்மை பாரத இயக்க திட்டத்தில் பள்ளிச்சுவரில் விழிப்புணர்வு வாசகம்

சிவகங்கை, -துாய்மை பாரத இயக்க திட்டம் (ஸ்வாச் பாரத் மிஷன்) மூலம் அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிச்சுவரில் துாய்மை குறித்த விழிப்புணர்வு வாசகம் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது.காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிச்சுவர், கழிப்பறைகளில் துாய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக எழுத வேண்டும்.அவற்றில் 'பள்ளி கழிப்பறையை பயன்படுத்தி அசுத்தத்தை அகற்றி நோயை ஒழிப்போம். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறை பயன்படுத்திய பின் கைகளை சோப்பால் கழுவவும். கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை, என எழுத வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. விளம்பர எழுதும் சுவரில் பச்சை நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும். எழுத்துக்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment