அரசு பள்ளிக்கு, 'ஸ்மார்ட் கிளாஸ்'

 அரசு பள்ளிக்கு, 'ஸ்மார்ட் கிளாஸ்'
தஞ்சாவூர்:உறவினர்களிடம் நிதி திரட்டி, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைத்து கொடுத்த, கணித ஆசிரியைக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த விளாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 110 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இந்நிலையில், கணித ஆசிரியை, பெருந்தேவி, 40, அரசுப்பள்ளி, மாணவ - மாணவியரின் கல்வி திறனை அதிகப்படுத்த, ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த திட்டமிட்டார்.இதற்காக, தன் உறவினர்களிடம், நிதி உதவி கோரியுள்ளார். பெருந்தேவியின் தாய், அலமேலு, அதே பள்ளியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர் என்ற முறையில், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மற்ற உறவினர்கள், 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் நிதியை திரட்டி, 'புரொஜக்டர், டச் ஸ்கீன், கம்ப்யூட்டர்' உள்ளிட்ட பல்வேறு, நவீன கருவிகள் வாங்கி, பள்ளி யில், ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துள்ளார்.அரசுப் பள்ளிக்கு, ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுத்த, கணித ஆசிரியை, பெருந்தேவிக்கு, மாணவர்களின் பெற்றோர், சக ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.தனியார் பள்ளி மோகம் அதிகரித்துள்ளது. 
இப்பகுதியில் உள்ள, மாணவ - மாணவியருக்கு, தனியார் பள்ளியை விட, சிறப்பாக கற்பிக்க வேண்டும் என, நினைத்தேன். அதற்காக, உறவினர்களிடம் நிதி திரட்டி, 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைத்தேன். 300 மாணவர்கள் படித்த பள்ளியில், தற்போது, எண்ணிக்கை குறைந்து விட்டது. இதை அதிகப்படுத்த வேண்டும்.-ஏ.பெருந்தேவி, கணித ஆசிரியை

No comments:

Post a Comment