சென்னை,:தமிழக அரசின் தலைமைச் செயலர் உட்பட, மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இம்மாதம் ஓய்வு பெற உள்ளனர்.தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கலை மற்றும் கலாசார துறை ஆணையர் ராமலிங்கம் ஆகியோர், இம்மாதம் ஓய்வு பெறுகின்றனர்.இவர்களில், தலைமைச் செயலருக்கு, பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக, தகவல் வௌியாகி உள்ளது.