பிரதமர் மோடி நன்றி கடிதம் ஆறாம் வகுப்பு மாணவன் நெகிழ்ச்சி

பிரதமர் மோடி நன்றி கடிதம் ஆறாம் வகுப்பு மாணவன் நெகிழ்ச்சி

பெரம்பூர் இரண்டாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆறாம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பூர் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்; சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர். இவரது மகன் பிரனவ் 10; கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இரண்டாவது முறையாக பிரதமரானார் நரேந்திர மோடி. இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரனவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரனவ் ராஜ்குமார் நீங்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் 130 கோடி மக்களும் சிறந்த நிர்வாகம் வளர்ச்சி அரசியல் ஆகியவை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டி உள்ளனர்.இளைஞர்கள் நிலையான அரசுக்கு வாக்களித்துள்ளனர். ஐந்து ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நவீன காலத்திற்கு ஏற்ப புத்தாக்க முடிவுகளை எடுத்துள்ளது.இதில் சரியான முயற்சியுடன் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதன் வாயிலாக சாத்தியமில்லா ததை சாத்தியமாக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறது.2022ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்க வேண்டும். இந்தியாவை உலகிலேயே உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.நாங்கள் வளர்ச்சியை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்வோம். முற்போக்கான வளர்ச்சி ஊழலற்ற நிர்வாகம் வாயிலாக வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்இவ்வாறு பிரதமரின் நன்றி கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment