மூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம்

சென்னை, அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள 12 சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சட்ட பல்கலையிலும் ஒவ்வொரு சட்ட கல்லுாரிகளிலும் விண்ணப்பங்களை பெறலாம்.மேலும் சென்னையில் சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லுாரியில் மூன்று ஆண்டு 'ஹானர்ஸ்' சட்ட படிப்புக்கும் இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதற்கு சீர்மிகு சட்ட கல்லுாரியில் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும். ஜூலை 27க்குள் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment