புதிய தரவரிசை பட்டியல் வெளியிட ஜிப்மர் நிர்வாகத்திற்கு கோரிக்கை

புதுச்சேரி:புதுச்சேரிக்கான தரவரிசை பட்டியலில் வெளி மாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளதை நீக்கி, புதிய பட்டியல் வெளியிட வேண்டும் என, ஜிப்மர் நிர்வாகத்திற்கு, மாணவர், பெற்றோர் நலச்சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து நலச்சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:2019-2020 ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்களின் சேர்க்கைக்கான ஜிப்மர் வெளியிட்டுள்ள பட்டியலில், புதுச்சேரி மாநிலத்தைச் சேராத மாணவர்கள், புதுச்சேரி மாநிலத்தில் பூர்வீக இடம் கொள்ளாதவர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச தரைவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் 90 இடத்திற்குள்ளாகவே, தெலுங்கானா, அரியானா, உத்திரபிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே, தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஜிப்மர் நிர்வாகம் எம்.பி.பி.எஸ். முதல் கலந்தாய்விற்கு புதுச்சேரியில் குடியுரிமை, இருப்பிட சான்றிதழ், பிக்பார்ம் மற்றும் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவைகளை பெற்றோருடன், கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.எனவே, கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பு திருத்தியமைக்கப்பட்ட, புதுச்சேரி மாணவர்கள் மட்டும் இடம் பெறும் வகையிலான புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment