சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, இன்றுடன் முடிகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, மே, 2 முதல், 31 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன; 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 7ல் துவங்கியது. ஜூன், 12ல் முடிவதாக இருந்தது.ஆனால், பல மாணவர்கள் உரிய நேரத்தில் வராததாலும், சில சான்றிதழ்களை கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டியிருந்ததாலும், சான்றிதழ் சரிபார்ப்பு காலம், இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இன்று மாலை, 5:00 மணியுடன், இந்த பணிகள் முடிகின்றன. இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒரு வாரத்தில், தரவரிசை பட்டியல் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.