சென்னை, : மாநில தேர்தல் ஆணையரின் ஆய்வு பணிகள் முடிந்ததும், ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில், உள் ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியை, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி துவங்கியுள்ளார். முதல் கூட்டம், கோவையில் நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட வாரியாகவும், மண்டல வாரியாகவும்கூட்டம் நடத்தப்படவுள்ளது.இதில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச் சீட்டுகள், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.ஆய்வு கூட்டங்கள், ஜூலை முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட உள்ளன. அதன்பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதாக, மாநில தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.