ஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர்

பொதுத்தேர்வு,அட்டவனை


சென்னை, சென்னை தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், ஆறு பாடம் என்ற திட்டம், தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். '3, 4ம் வகுப்பு பாடப் புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை' என, எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.

அனைத்து பள்ளிகளுக்கும், பாடப்புத்தங்கள் அனுப்பப் பட்டுள்ளன. தமிழகத்தில், 1, 6, 9, மற்றும், 11ம் வகுப்பு பாடத்திட்டங்கள், 2018ல் மாற்றி அமைக்கப்பட்டன. தற்போது, மீதமுள்ள எட்டு வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.தொழில் சார்ந்த பாடத் திட்டங்களாக, ஹோட்டல் மேனேஜ்மென்ட், சுற்றுலா மேலாண்மை போன்றவை, அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அரசை பொறுத்தவரை, பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை. தனியார் பள்ளிகள் குறித்து, நாங்கள் கருத்து கூற இயலாது. பொதுத்தேர்வு எப்போது என்ற விபரம், ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். . இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment