சென்னை : 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல், ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ், - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 3,650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நடைபெற உள்ளது.நீட் தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, www.tnhealth.org மற்றும், www.tnmedicalselection.net என்ற, இணைய தளங்களில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.