கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு

கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்று(ஜூன் 17) திறக்கப்படுகின்றன. சீனியர் மாணவர்களை, ஜூனியர்கள் வரவேற்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழக பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல் மீண்டும் வகுப்புகள் துவங்கின. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான, கவுன்சிலிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. கல்லுாரிகளுக்கான கோடை விடுமுறையும், நேற்றுடன் முடிந்துள்ளது. ஒன்றரை மாதத்துக்கு பின், மீண்டும், புதிய கல்வி ஆண்டில், கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்று திறக்கப்படுகின்றன.

'புதிய கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்து, புதிய மாணவ, மாணவியர், கல்லுாரி படிப்புகளில் சேர்ந்திருப்பர். 'அவர்களை, சீனியர் மாணவர்கள், 'ராகிங்' செய்வது, கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு சார்பில், கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லுாரிகளிலும், ராகிங் மற்றும் சீனியர், ஜூனியர் பிரச்னைகளை தடுக்க, சீனியர் மாணவர்கள் வழியாக, ஜூனியர்களை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் கல்லுாரிகளில், சீனியர் மாணவியர், ஜூனியர்களுக்கு பூக்கள் கொடுத்து, வகுப்பறைக்கு அழைத்து செல்ல, முடிவு செய்துள்ளனர். புதிய மாணவர்களுக்கு, இன்று முதல், ஒரு வாரத்துக்கு, 'ஓரியன்டேஷன்' எனப்படும், புரிந்துணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment