இலவச 'லேப்டாப்' அரசு புதிய முடிவு

சென்னை, நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கே இலவச 'லேப்டாப்' வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக 'லேப்டாப்' என்ற மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.இதில் 2017 - 18ம் ஆண்டு பிளஸ் 2 படித்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு 2018 - 19ம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.அதன்படி 2017 - 18ல் பிளஸ் 2 முடித்தவர்கள்; 2018 - 19ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பவர்கள் என மூன்று பிரிவினருக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 'எல்காட்' நிறுவனம் வழியாக 15.53 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.இந்நிலையில் லேப்டாப் வழங்கும் முடிவில் அரசு மாற்றம் செய்துள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டான 2019 - 2020ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து முதலில் லேப்டாப் வழங்கப்படும். அதன்பிறகே ஏற்கனவே படித்து முடித்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இதனால் லேப்டாப் கிடைக்கும் என பிளஸ் 2 முடித்து இரு ஆண்டுகளாக காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment