மருத்துவ படிப்பு: விண்ணப்ப நிலை அறிய வசதி

சென்னை, மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தோர்தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. 2019 - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 59 ஆயிரத்து 756 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை www.tnhealth.org www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.மருத்துவ கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment