அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தரராஜன் யோகா செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் சிந்தனை சிதறாமல் அறிவை மேம்படுத்த யோகா பயிற்சி உதவுவதாக தெரிவித்தார்.

மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டதாக யோகா உள்ளதாகவும், வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை என்று அவர் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் என்ற நிலைபாட்டில் அரசு தெளிவாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment