கல்வித்துறை ஊழியருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

சிவகங்கை:கல்வித்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செய்ய இணை இயக்குனர் நாகராஜ முருகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக கல்வித்துறையில் அனைத்து ஊழியர்களும் உத்வேகத்துடன் பணியாற்றவும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படும் விதத்தில், ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முதல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வரை அனைவரையும் பாரபட்சமின்றி இடமாறுதல் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக ஜூலை 3ம் தேதி மாவட்ட அளவில் கவுன்சிலிங் நடத்தி இடமாறுதல் செய்யப்பட வேண்டும். ஊழியர்களுக்கு பாதிப்புன்றி, புகார்களுக்கு இடமளிக்காமல் நடத்த வேண்டும், பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, கவுன்சிலிங்கிற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்கள் விபரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment