கல்வி கட்டண நிர்ணயம் பள்ளிகளுக்கு கெடு

சென்னை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகள், ஒரு மாதத்திற்குள் விண்ணப்பித்து, கட்டணத்தை நிர்ணயிக்குமாறு, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை, நீதிபதி மாசிலாமணி தலைமையிலான, கல்விக் கட்டண கமிட்டி நிர்ணயிக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில், 8,000 பள்ளிகள், இந்த கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவு பெற்றுள்ளன.அவற்றின் பட்டியல், http://tamilnadufee committee.com என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.இது குறித்து, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நடப்பு கல்வி ஆண்டுக்கு, கட்டணம் நிர்ணயித்த பள்ளிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளன. அவை தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகள், இந்த மாதத்துக்குள் விண்ணப்பித்து, கட்டணத்தை நிர்ணயித்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். இது குறித்து, ஜூலை, 1க்குள் அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment