ராமநாதபுரம்; ''5 முதல் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்,'' என அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் எம்.முருகேஸ்வரி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் சங்க மாநில பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது:அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசு இரு முறை அறிவித்த ஊதிய உயர்வை, மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.கூடுதல் மைய பொறுப்பு ஊதியத்தை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். மையங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை உயர்த்த வேண்டும். ஆசிரியர் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.மாநில செயலர் ஆர்.உமா, பொருளாளர் பானு, மாவட்ட தலைவர் கே.சாந்தி உடனிருந்தனர்.