மாத்தி யோசிக்கும் பள்ளி மாணவர்கள் ஆஹா... அற்புதம்!பொள்ளாச்சி அருகே, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து, நீர் சிக்கன முறையை பின்பற்றி வாழை மரத்தில் கீரை சாகுபடி, இளநீர் மட்டையில் செடி வளர்ப்பு போன்ற முறைகளை கையாண்டு அசத்துகின்றனர்.பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 93 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், மரம் வளர்ப்பு, விதை பந்து தயாரித்தல், மூலிகை செடிகள் நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில், நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய சாகுபடியை இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.வாழை மரத்தின் தண்டு பகுதியில் கீரை சாகுபடி, இளநீர் மட்டையில் மூலிகை, கீரை சாகுபடி, பிளாஸ்டிக் குழாயில் காய்கறி செடி சாகுபடிகளை செய்துள்ளனர்.அதில், பி.வி.சி., குழாயில், வரிசையாக செடிகளை நடவு செய்து, அதற்கு குளுக்கோஸ் பாட்டில் நீர் பாசன முறையினை பின்பற்றுகின்றனர்.

வாழை மரத்தண்டில் சாகுபடி செய்து நீர் சிக்கனத்தை கடைபிடித்து அசத்துகின்றனர்.பள்ளியின் அறிவியல் ஆசிரியை கீதா கூறியதாவது:பள்ளி தலைமையாசிரியர் சுகுணாராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒத்துழைப்புடன் காய்கறி சாகுபடி, மூலிகை சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.மாணவர்கள், இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த, செயல் விளக்கம் அளிப்பதுடன், சாகுபடி செய்யப்படுகிறது.தொட்டியில் வீட்டு தோட்டம், பைகளில் தோட்டம், பழைய குழாய்களில் தோட்டம், வைக்கோல் பேல்களில் தோட்டம், தேங்காய் நார் கழிவு, பிளாஸ்டிக் பாட்டிலில் தோட்டம் என்பது போன்று, வெட்டி எடுக்கப்பட்ட வாழை மரத்தில் தோட்டம் வளர்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.பழைய ஏணி அல்லது மூங்கில் கட்டைகளை கொண்டு, கொலு படி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.வாழை மரத்தை தரையில் வைத்தால் பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, ஏணி அல்லது படி போன்ற அமைப்பினை ஏற்படுத்தி வாழை மரத்தில் செடிகள் வளர்க்கலாம்.செடிகள் வளர்ப்பில் இடப்பற்றாக்குறையை சமாளிக்க இளநீர் மட்டையில் செடி வளர்ப்பு முறை செய்யப்படுகிறது. மாணவர்கள் படிப்பதுடன், இயற்கை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு, ஆசிரியர் கூறினர்.உகாண்டாவை பின்பற்றும் பள்ளிகுறுகிய வேர் வளர்ச்சி உள்ள தாவரங்களை வளர்க்கலாம். வாழை மரத்தண்டில் செடி வளர்ப்பதால் அதிகளவு தண்ணீர் தேவையில்லை; மரத்தில் உள்ள நீர் தன்மையே போதுமானது.மேலும், வாழைத்தண்டில் அதிகளவு சத்துகள் உள்ளதால், வளரும் செடிகளுக்கு சிறந்த ஊட்டசத்தை அளிக்கும்.

வாழை மட்டையில், இயற்கையாகவே நீரை சேமித்து உட்கிரகித்து வைக்கும் குணம் உள்ளதால், நீர் வீணாகாது. வாழை மரத்தண்டில், பசலை கீரை, வெந்தய கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவை வளர்க்கலாம். இம்முறையில், மரங்களை இரண்டு அல்லது மூன்று முறை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். அதன் பிறகு, வாழை மரங்களை துண்டாக வெட்டி இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.உகாண்டா நாட்டில் வாழை மரத்தில் செடி வளர்க்கும் முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர், என, ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment