சென்னை பல்கலை இன்று, 'ரிசல்ட்'

சென்னை, சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளின் தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, ஏப்ரலில் நடத்தப்பட்ட, பட்டப்படிப்பு தேர்வுகளின் முடிவு, இன்று வெளியாகிறது.முடிவுகளை, http://www.ideunom.ac.in மற்றும் http://egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.விடைத் தாள் மறுமதிப்பீடுக்கு, வரும், 2ம் தேதி முதல், 9ம் தேதி வரை, தங்கள் கல்லுாரிகளின் வழியே விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, சென்னை பல்கலையின் இணையதளம் வழியே, ஜூலை, 2 முதல், 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை, தேர்வு கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment