சென்னை:அடுத்தாண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனி தேர்வர்கள், செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.


அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்கும், 10ம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க முடிவு செய்துள்ள மாணவர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கு, நாளை முதல், 26ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று, அறிவியல் செய்முறை பயிற்சிக்கு, பெயர்களை பதிவு செய்ய வேண்டும். விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு, பதிவு செய்யாத தேர்வர்களின் விண்ணப்பங்கள், கட்டாயம் நிராகரிக்கப்படும். எனவே, தனி தேர்வர்கள் பதிவுகளை, கவனமாக மேற்கொள்ள வேண்டும். இந்த தகவலை, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.