சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், 10ம் தேதி கிடைக்கும். 


பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வு நடத்தப்பட்டது. இதில், சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வர முடியாதவர்களுக்கு, ஜூனில், சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில், 'மார்ச் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கு, 10ம் தேதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்களிடத்திலும், தனியாக தேர்வு எழுதியோர், தேர்வு மையங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.