*****************************
அரசாணை எண் 218 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு எட்டாம் தேதி தொடங்கி 11.07.2019 இன்று மாலை வரையில் கால அட்டவணைப்படி இணையதளம் வழியாக நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு விதித்தளர்வு கேட்டு நீதிமன்றம் சென்றவர்கள், அங்கன்வாடி பள்ளிகளில் நியமிக்கப் பட்டவர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கும்படி நீதிமன்றம் சென்றவர்கள் என பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் பணித்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பதிலாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும், இணை இயக்குநர் அவர்களும் நீதிமன்றம் சென்றிருந்தார்கள். நீதியரசர் பார்த்திபன் அவர்கள் விசாரணையை கேட்டறிந்தார். ஒருகட்டத்தில் இதுவரை வந்த அரசாணைகளுக்கு நேர் மாறாக இந்த அரசாணை வந்துள்ளது என்பதை விசாரணையில் தெரிந்து கொண்ட நீதியரசர் அவர்கள் நடைபெறுகின்ற மாறுதல் கலந்தாய்வினை நிறுத்திவைத்து ஆணை வழங்கியுள்ளார். மறு உத்தரவு வரும் வரை யில் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் நடைபெறக்கூடிய கலந்தாய்வு நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே மாவட்ட மாறுதல்கள் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாணையினை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் 9ஆம் தேதி முதல் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வில் பெற்ற பணியிட மாறுதல்களும் நிறுத்திவைக்க பட்டுள்ளதா? என்பதை பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக விளக்கம் கேட்க உள்ளார்கள். அனேகமாக இதுவரையில் நடைபெற்ற கலந்தாய்வு மாறுதல் ஆணைகளை நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பு உருவாகாது என நாம் நம்புகிறோம். *Stay order என்பதை விட kept in abeyance* என்பது பொருத்தமாக இருக்கும். பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் வழக்கு தொடுத்தவர்களுக்கு சாதகமாக அமையும் என நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

*காத்திருப்போம்*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*