இன்ஜி.,கவுன்சிலிங்: 2ம் சுற்று மாணவர்களுக்கு இன்று உத்தேச ஒதுக்கீடு

சென்னை, : இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், மூன்றாம் சுற்று மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்தும் வசதி, நாளை முடிய உள்ளது. 


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஏற்கனவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதில், 177.5 முதல், 200 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், முதல் சுற்றில் பங்கேற்றனர். 
இதற்கான தரவரிசை பட்டியலில், 9,872 பேர் இடம் பெற்றனர். அவர்களில், 6,740 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இரண்டாம் சுற்று மாணவர்களுக்கான விருப்பப்பதிவு, நேற்று மாலை, 5:00 மணியுடன் முடிந்தது. இதில், 21 ஆயிரத்து, 54 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உத்தேச ஒதுக்கீடு, இன்று வெளியிடப்படுகிறது. நாளை மாலை, 5:00 மணிக்குள், இந்த இடங்களை மாணவர்கள் உறுதி செய்ய, அவகாசம் தரப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, மூன்றாம் சுற்றுக்கான கவுன்சிலிங், 18ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி கட்டணம் செலுத்தும் வசதி, நாளையுடன் முடிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment