மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 3.52 லட்சம் பேர் தேர்ச்சி

புதுடில்லி,'சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் கல்வி தகுதி தேர்தலில், 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற, இந்த அமைப்பு நடத்தும், சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.கடந்த, 1௨ ஆண்டுகளாக இந்த தேர்வை நடத்தி வரும், சி.பி.எஸ்.இ., கடந்த, 7ம் தேதி நடத்தி தேர்வில், 23.77 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து, 23 நாட்களே ஆன நிலையில், முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.தேர்வு எழுதிய, 23.77 லட்சம் பேரில், 3.52 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த, 2.15 லட்சம் பேரும், ஆறு முதல் எட்டாம் வகுப்ப வரை பாடம் நடத்த, 1.37 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவை, 23 நாட்களிலே முதல் முறையாக வெளியிட்டதற்காக, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment