அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களிலும் மழலையர் வகுப்புகளிலும் ஆசிரியர்களாக வேலை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உபரி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றுவதாக 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழகம் முழுவதும் 7000 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும் நடவடிக்கைகள் நடைபெறுகிறது. அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் மனுதாரர்கள் இடைநிலை வகுப்புகளை மட்டும் எடுக்கலாம். அரசுமழலையர் வகுப்பு எடுக்க நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்ட மற்ற பயன்களில் எந்த மாற்றமும் இருக்காது' என அரசு தெரிவித்தது.