இருமொழிக் கொள்கையில் உறுதி” - சட்டசபையில் செங்கோட்டையன்*

இருமொழிக் கொள்கையில் தமிழகம் உறுதியாக இருக்கும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இருமொழிக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும், அந்த முடிவிலேயே உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மூன்று மொழிக் கொள்கையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் மத்திய அரசின் சார்பில் வெளியான புதிய கல்விக் கொள்கையில், 5ஆம் வகுப்புவரை ஆங்கிலவழியை விட தாய்மொழி வழிக் கற்பித்தலை முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாய்மொழி, ஆங்கிலம் அல்லாத மூன்றாவது மொழியை கற்கும் மும்மொழிக் கொள்கையை 6ஆம் வகுப்பு முதல் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment