மாணவ - மாணவியருக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள்

சென்னை, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்ட அளவில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், ஆக., 7ல் நடக்க உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், கல்லுாரி மாணவர்களுக்கான, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், ஆக., 9ல் நடக்க உள்ளன.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லுாரி முதல்வரிடம், உரிய படிவத்தில் பரிந்துரை பெற வேண்டும். அதை, போட்டி நடக்கும் நாளில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும்.போட்டி விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை, தமிழ் வளர்ச்சித் துறையின், www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.போட்டிக்கான தலைப்புகள், போட்டி நடக்கும் நாளில் அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டு, பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டியில், ஒரு பள்ளி மற்றும் கல்லுாரியில் இருந்து, மூன்று மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment