இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று விருப்ப பதிவு

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், நான்காம் சுற்று மாணவர்களுக்கு, இன்று முதல் விருப்ப பதிவு துவங்க உள்ளது.


அண்ணா பல்கலையில் இணைந்துள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங் நடந்து வருகிறது.விளையாட்டு பிரிவு, தொழிற்கல்வி, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு, நேரடி ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, கடந்த, 3ம் தேதி முதல், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடந்து வருகிறது.மூன்று சுற்றுகளில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் முடிந்து விட்டது. 

நான்காம் சுற்றில் உள்ள, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்தும் அவகாசம், நேற்றுடன் முடிந்தது.இன்று முதல், விருப்ப பாட பிரிவுகள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கான, ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது.விருப்ப பாடங்களை பதிவு செய்ய, நாளை மறுநாள் வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த சுற்றுடன், இந்த ஆண்டுக்கான பொது பாட பிரிவு, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிகிறது.

No comments:

Post a Comment