இன்ஜி., துணை கவுன்சிலிங் நாளை துவக்கம்

சென்னை, 'இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் நாளை துவங்கும்' என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. பொதுப் பாட பிரிவுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து பிளஸ் 2 துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்குக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் முடிந்தது. தொடர்ந்து துணை கவுன்சிலிங் நாளை துவங்க உள்ளது.'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் இதில் பங்கேற்பவர்களுக்கான அழைப்பு கடிதம் தபாலிலும் இ - மெயிலிலும் அனுப்பப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment