வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலூர்  மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களை கணினி குலுக்கல்  முறையில் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் இப்பணியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது, இத்தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 1,553  வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 7,576 அலுவலர்களைத் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment