*🔶🔶அரசு பள்ளிகளில் மகப்பேறு விடுமுறையில் உள்ள ஆசிரியைகளுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியைகள் நியமிக்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.*


*🔶🔶குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-ம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா நாகர்கோவில் அருகே சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது.*

*🔶🔶நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், `தமிழகத்தில் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 54 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி இருக்கிறோம்.*

*🔶🔶இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல, முயற்சி நின்றாலும்கூட மரணம்தான். எனவே முயற்சி செய்து நீங்கள் படித்து வெற்றி பெற வேண்டும்’ என்று கூறினார்.*

*⭕⭕மகப்பேறு காலத்தில் மாற்று ஆசிரியைகள்:*

*♦♦நிகழ்ச்சிக்குபின் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.*

*♦♦இதுதொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.*

*♦♦மகப்பேறு விடுமுறையில் உள்ள ஆசிரியைகளுக்கு பதிலாக மாதந்தோறும் ₹10 ஆயிரம் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து கொள்ளலாம்.*

*♦♦அந்தந்த பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கங்கள் இதை முடிவு செய்யலாம். இதற்கான நிதியை தமிழக அரசு வழங்கும்’’ என்று அறிவித்தார்.*