சேலம் சி.இ.ஓ.,வுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பணி

பள்ளி கல்வி துறையின், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த கணேசமூர்த்தி, ஒரு வாரத்துக்கு முன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.அவருக்கு பதில், சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமிக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், காத்திருப்பு பட்டியலில் இருந்த, கணேசமூர்த்தி, நேற்று மீண்டும், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக, பணி அமர்த்தப்பட்டார். இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment